சின்னஞ்சிறு வயதில் எனக்கோர். . .

( translated from the article http://thekambattu.wordpress.com/2013/10/09/how-early-we-corrupt-our-children/)
கோவிந்தராஜின் பத்து வயது மகன் ஸாம், இந்த வருடம் ஜூன் மாதத்திலிருந்து, இங்கிருந்து 40 கிமீ தொலைவிலுள்ள சேராப்பட்டு என்னும் ஊரில், ஹாஸ்டலில் சேர்ந்து படிக்கிறான். கோவிந்தராஜ் ஒரு கிறித்தவர்; அதனால் அந்தப் பள்ளியில் ஸாமுக்கு படிப்பு, துணிமணி, புத்தகங்கள், உணவு எல்லாம் இலவசம். ( இதே பாணியில் செயல்படும் இந்து பள்ளிகளும் ஏராளம். இங்குள்ள மலைவாசிகளெல்லாம் இந்து மதமென்று மூளை சலவை செய்யப்பட்டு வெகு நாளாகிறது.)

சமீபத்தில் ஒரு நாள் கோவிந்தராஜ் எங்கள் வீட்டிற்கு வந்த போது சோணாட்டியிடம் சொன்ன கதை இது:
புதிய மாணவர்கள் தங்களை பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டும். இந்த கட்டுரைகள், நன்கொடை அளிக்கும் வெளி நாட்டு நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். நமது ஸாம் ( ஜாதி சான்றிதழ் தேவைப்படும் பொது பெயர் ஷ்யாம் என்று மாறும்! ஏனென்றால், இங்குள்ள கிராம அதிகாரிகள் கிறித்தவ பெயர் கொண்டவர்கள் ஆதிவாசிகள் இல்லை என்று அவர்களாகவே முடிவு செய்துவிட்டார்கள்! இது ஒரு தனி கதை!) தன்னுடைய கட்டுரையில் தன் குடும்பத்தைப் பற்றியும், குடும்பத்தின் நெல் மற்றும் கரும்பு வயல்களைப் பற்றியும் எழுதினான். நியாய விலை கடையில் கொடுக்கும் அரிசியை சாப்பிடாமல் தாங்கள் விளைவித்த அரிசியையே சாப்பிடுவதாக பெருமையுடன் எழுதினான்; தங்களிடமுள்ள ஆடுகள், கோழிகள், மாடுகள் பற்றி எழுதினான். அவனுடைய அப்பாவின் பைக் பற்றியும், இரண்டு மொபைல் போன் பற்றியும் குறிப்பிட்டான் ; தன்னுடைய வீடு ஓலை குடிசை கிடையாது, ஓட்டு வீடு என்று பெருமிதப் பட்டான். நிலத்திலிருந்து வரும் வருட வருமானம் இரண்டு லட்சம் ரூபாய் என்றும் எழுதினான். ஆக மொத்தம் ஒரு நல்ல வழக்கை என்பதை படம் பிடித்துக் காட்டியிருந்தான்.
பள்ளிகூட நிர்வாகிகள் கோவிந்தராஜை கூப்பிட்டு, இந்த கட்டுரையை அப்படியே அனுப்பினால் உதவி தொகை கிடைக்காது என்றும் முழு கட்டணத்தையும் ( ஆண்டுக்கு சுமார் அறுபது ஆயிரம் ரூபாய்) கட்டுமாறும் கூறினர். இவ்வளவு பெரிய தொகையை கட்ட இயலாத கோவிந்தராஜ், அங்கிருந்த பாதிரியாரிடம் செல்ல, அவர் இவருக்கு சிபாரிசு செய்ய, பள்ளிக்கூடம் ஒத்துக் கொண்டது ஒரு நிபந்தனையோடு ; கட்டுரையை மாற்றி எழுத வேண்டும்!
ஸாம் மாற்றி எழுதிய கட்டுரையின் சாராம்சம் :
கடையில் விலை கொடுத்து வாங்க முடியாமல் தங்கள் சொந்த அரிசியை சாப்பிடுகிறார்கள்; இரண்டே இரண்டு மாடுகள், வெறும் மூன்று ஆடுகள், மிகச் சில கோழிகள் உள்ளன ; கான்க்ரீட் வீடு கட்ட முடியாமல் ஓட்டு வீட்டில் வசிக்கிறார்கள்; நிலத்திலிருந்து வரும் வருமானம், செய்கூலி, டிராக்டர் கூலி, எல்லாம் கொடுத்தது போக மாதம் 6000 ரூபாய் தான். இதில் அவர் மற்ற இரண்டு பையன்களையும் படிக்க வைக்க வேண்டும்.பைக்கும் போனும் இந்த கட்டுரையில் குறிப்பிடப் படவில்லை.

இரண்டு கட்டுரைகளுமே உண்மையைத் தான் காட்டுகின்றன; ஆனால் இரண்டாம் முறை எழுதும் போது, அந்த சின்ன பையனின் மனம் எப்படி சிறுமைப்பட்டிருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள். எனக்கு நெஞ்சு அடைக்கிறது.

Advertisements

One response to “சின்னஞ்சிறு வயதில் எனக்கோர். . .

  1. எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்போரும் ‘மெய்ப்பொருள்’ காண்பிக்கும் அறிவை, மாந்தர்க்கு கற்றனை ஊற வைக்கும் நோக்கில் கல்வி மையங்கள் இயங்கினால், இத்தகைய பொய்ப்பொருள் காண வேண்டியதில்லை.

    மத போதகர், மதத்தை வ்யாபாரமாக்குகிறார்
    தந்தை பணத்திற்காக பொய் சொல்ல ஒப்புகின்றார்
    சாம் பாவம், இதை எல்லாம் பொறுத்துக்கொண்டு கல்வி கற்றால், அதில் மதங்களுக்கு மரியாதையும், தந்தை சொல்லை மந்திரம் என்றும் போதிக்கும்!

Please give us your feedback on this post.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s