ஏழைகளின் வங்கி – A translation

I am not going to attempt to translate the whole book “Banker to the Poor” here. What I intend to do is to take those sections which is very appealing to myself. Please feel free to comment on the rightness of language context etc. It will help me to do better. . .

I do hope that Mr.Yunus will not sue me for this unauthorised translation!

Post 1
யூனுஸ் அவர்களுக்கு 1994 ம் ஆண்டு “உலக உணவுப் பரிசு” (world Food Prize) வழங்கப்பட்டது.   அதை ஏற்றுக் கொண்டு ஆற்றிய உரையில் அவர் சொன்னார்:
பலராலும் கொண்டாடப்படும் பொருளாதார கோட்பாடுகள் பசியைப் பற்றியும், வறுமையைப் பற்றியும் பேசுவதில்லை. பொருளாதார முன்னேற்றம் நிகழும் போது, இந்த “சிறிய” பிரச்னைகள்  தீர்க்கப்பட்டுவிடும் என்று அவை போதிக்கின்றன. இந்த நிபுணர்கள் முன்னேற்றம் மற்றும் அதனால் கிட்டும் செழிப்பான வாழ்க்கை  பற்றி மட்டுமே திட்டமிடுவதில் முழு நேரத்தையும் செலவிடுகிறார்கள். வறுமையும், பசியும் நிகழ்த்தும் கொடுமைகளை பற்றி கண்டு கொள்வதே இல்லை.

உலகம் எப்போது வறுமை ஒழிப்பை ஒரு முக்கியமான தீவிரமான திட்டமாக நினைக்கிறதோ அப்போது தான் இந்த வெட்கி தலை குனியும் நிலைமை போய், நாம் பெருமைப் படும்படியான ஒரு உலகத்தை உருவாக்க முடியும் என்று நான் திடமாக நம்புகிறேன்.

Post 2

ஆசிரியர் முன்னுரை

நான் கிராமீன் வங்கியில் பெற்ற அனுபவம் மனிதர்களின் ஆக்க சக்தியில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்படுத்துகிறது. மனிதர்கள் பட்டினியாலும் வறுமையினாலும் அவதிப்படுவதற்கென்றே பிறக்கவில்லை என்பதையும் உறுதிப்படுத்துகிறது. எனக்கென்ன என்று நம்மில் பலர் இருப்பதால் தான் கற்காலம் போல் இன்னமும் பசியும் வறுமையும் மனித குலத்தை வாட்டுகின்றன.

வறியவரே இல்லாத உலகத்தை நாம் நிச்சயமாக, உறுதியாக உருவாக்க முடியும். வெறும் நல்லெண்னத்தால் நான் இந்த முடிவிற்கு வரவில்லை – கிராமீன் வங்கி அனுபவம் கொடுத்த படிப்பினையால் வந்த முடிவு.

நுண்கடன் திட்டம் மட்டுமே வறுமையை ஒழித்துவிடாது. மக்களை வறுமையிலிருந்து விடுவிக்கும் பல வழிகளில், வங்கிக் கடனும் ஒன்று. இன்னும் பலப்பல வழிகளை உருவாக்க முடியும். இதற்கு, ஏழைகளைப் பற்றிய பொதுவான மனப்போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். இந்த புதிய மனப்போக்குடன் வறுமை ஒழிப்பை திட்டமிட வேண்டும்.

இரண்டு விஷயங்களை கிராமீன் எனக்கு கற்றுக் கொடுத்தது: ஒன்று, மக்களைப் பற்றியும், அவர்களுடைய எண்ணப் போக்குகளைப் பற்றியுமான நமது அறிவு வெறும் பூஜ்ஜியம். இரண்டாவது, ஒவ்வொரு தனிமனிதனும் முக்கியமானவன். To be continued. . .

Post 3

அளவிடமுடியாத திறமையும் ஆற்றலும் எல்லொரிடமும் இருக்கிறது. ஒவ்வொரு பெண்ணாலும் ஆணாலும் மட்டுமே தத்தமது சமுதாயத்தில், நாட்டில் வாழும் சக குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை, இப்போதைக்கும் எதிர்காலத்திற்குமாக மாற்றியமைக்க இயலும்.

நம்மிடம் மறைந்திருக்கும் எல்லா திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிட்டுவது எல்லோர்க்கும் தானாக அமைவதில்லை. திறமைகளை வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களை நாமே உருவாக்காவிட்டால், நமது முழுத் திறனை அறிந்து கொள்ள இயலாது.

செல்ல வேண்டிய இலக்கை முடிவு செய்வது நாம். புவியின் பயணத்தை வழி நடத்தும் மாலுமியும் நாம் தான். மேற்கொண்ட வேலையை தீவிரமாக செய்தால் இலக்கை அடைவது நிச்சயம்.

Post 4
சிட்டகாங் பல்கலை கழகம் 1972 – 74
1972ம் ஆண்டு. மேற்கத்திய நாடுகளின் சிந்தனைப் போக்குடனும், பலப் பல லட்சியங்கள் கனவுகளோடும் அமெரிக்காவில் இருந்து தாயகம் திரும்பினேன். மேலை நாட்டு வாழ்கையும் அவரது அளவுக்கதிகமான பொருள் வாங்கும் கலாச்சாரத்தையும் பழகியிருந்தேன். கடினமான வேலைகள் செய்யும்போதும் மணிக் கணக்கில் தொலைக் காட்சியைப் பார்த்துக்கொண்டே செய்து வந்தேன்.

மேற்கு பாகிஸ்தானின் ஒரு பகுதியாய் இருப்பதை விட தனி நாடாய் இருந்தால் கிழக்கு பாகிஸ்தான் தனது இயற்கை வளங்களை நன்றாக பயன்படுத்தி பொருளாதார முன்னேற்றம் அடைய முடியும் என்று முழுமையாக நம்பினேன்.

போரின் இடிபாடுகளுக்கிடையில் எங்கள் மக்களின் நம்பிக்கையையும் துணிச்சலையும் கண்டேன். எல்லா துறைகளிலும், எங்கு நோக்கினும் இடர்பாடுகளே என்றாலும் மக்கள் அவற்றை நெஞ்சுரத்துடன் எதிர் கொள்வதை பார்த்தேன். ஆனால், மாதங்களும் வருடங்களும் உருண்டோடியது தான் மிச்சம்; நம்பிக்கைகள் நாராசமாயின. குறைகளை நிவர்த்திக்க யாருமில்லாமல், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போனது.

நான் திரும்பி வந்தவுடனே, அரசாங்க திட்ட குழுவில், நூதன பெயர் கொண்ட ஒரு பதவியில் வேலை கிடைத்தது. ஆனால் அங்கு நாளிதழ்களை படிப்பதை தவிர வேறு ஒரு வேலையும் எனக்கு இல்லை. பொருளாதாரத்தில் பெரிய பட்டம் பெற்ற ஒரு நிபுணரை வேலைக்கு அமர்த்தியதே தவிர, என்னை பயன் படுத்தி நாட்டை முன்னேற்றுவோம் என்று அரசு முயற்சிக்கவில்லை. பல முறை எங்கள் துறை தலைவரான திரு.நுருல் இஸ்லாம் ( இவரின் கட்டாயத்தில் தான் இந்த வேலைக்கு நான் சம்மதித்தேன் ) அவர்களிடம் முறையிட்டும் ஒன்றும் நடக்கவில்லை; வேறு வழியின்றி நான் வேலையை ராஜினாமா செய்து விட்டு சிட்டகாங் பல்கலைக் கழகத்தின் பொருளாதார துறையின் தலைவராக சேர்ந்தேன்.

One response to “ஏழைகளின் வங்கி – A translation

  1. Correct. i am forcefully accepted because -now a days marxisism is very poor.

Please give us your feedback on this post.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s